கோட்டைமுனை ஸ்ரீமகாமாரியம்மன் பஞ்சரத பவனி

(சிவம்) 
மட்டக்களப்பு கோட்டைமுனை மகாமாரியம்மன் பஞ்சரத பவனி நகர வீதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. 

பிள்ளையார், சிவன் பார்வதி, மாரியம்மன், முருகன் வள்ளி தெய்வானை மற்றும் சண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் ஐந்து தேர்களில் ஆரோகணித்ததும் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பவனி பொற்றொழிலாளர் வீதி, பாடும் மீன் வீதி, பயனியர் வீதி, அரசடிச் சந்தி , வெயிலி வீதி, சென் செபஸ்தியார் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

இரதோற்சவக் கிரியைகளை பிரதம குரு சிவஸ்ரீ உலக விக்கனேஸ்வரக் குருக்கள் உள்ளிட்ட உதவிக் குருமார் நிகழ்த்தினர்.

நாளை புதன்கிழமை (23) பங்குனி உத்திர தீர்த்தோற்சவம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.