(சுகிவர்ணன்)கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 'பன்னிரண்டு மாத விளக்கு' வேலைத்திட்டத்தின் மார்ச் மாத வேலை திட்டமான ' அம்மாவுடன் சித்திரம் பார்ப்போம்' வேலைதிட்டமான பாலர் பாடசாலை சிறார்களிற்கான ஓவிய கண்காட்சி இன்று 18.03.2016 ம் திகதி காலை மண்முனை மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்றது.
1-5 வரையான வயதினையுடைய சிறார்களின் மனதினில் கலாசார மற்றும் கலை இரசனைகளை தோற்றுவித்தலுடன் அவர்களின் அம்மாவுடன் சேர்ந்து சுதந்திரமாக ஓவியங்களை அவதானிப்பதன் மூலம் ஓவிய கலையினை ஊக்குவிப்பதுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தாய்க்கும் சேய்க்குமிடையிலான கலாசார ரீதியான உறவினை வலுப்படுத்தல் எனும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.
இதன் பொருட்டு மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலத்திலுள்ள நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 'அம்மாவுடன் சித்திரம் பார்ப்போம்' எனும் தொனிப் பொருளில் பாலர் பாடசாலை சிறார்களிற்கான ஓவிய கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தது.
இவ் நிகழ்வினில் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், நாமகள் வித்தியாலய அதிபர் கோபாலபிள்ளை போன்றோரினால் கண்காட்சி ரிப்பன் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது, கலாசார அலுவல்கள் திணைக்கள மாவட்ட கலாசார இணைப்பாளா் எம்.சி.எம்.ஜெய்னுலாப்தீன், பிலான் இன்டர் நஷனல் எஸ்.சுரெஸ், மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.தனுஷியா யோகேந்திரன், பிரதேச பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோரும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ் நிகழ்விற்கு, பாலர் பாடசாலை சிறார்களிற்கான பரிசில்கள்,சிற்றுண்டிகள் பிலான் இன்டர் நஷனல் தொண்டு நிறுவனம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.




























