மட்டக்களப்பு மாவட்டப் பெண்கள் சமாசம் மற்றும் அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு

(கோபி) மட்டக்களப்பு மாவட்டப் பெண்கள் சமாசம் மற்றும் அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய நிலை மாறு கால நீதியை வலியுறுத்தியதாக அமைந்த 2016 சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2016.03.12 அன்று கிறீன் கார்டன் ஹொட்டேல் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.]
 
 
இதில் பிரதம அதிதியாக பிரதேச சபைகளில் அபிவிருத்தி குழு தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ எஸ் வியாளேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார் சிறப்பு அதிதியாக மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களும் மற்றும் தன்னார்வ நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர் இதில் சிறப்பான விடயம் என்னவெனில் விதவைகள் பட்டயம் கையளிக்கப்பட்டது.