மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மட்டக்களப்பு பாரதிபுரம் பகுதியைச் சேரந்த 17 வயதான சிறுமியுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் சிறுவர்கள் விடுதியொன்றில் தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந்து வந்த சிறுமியொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.













