(ஷமி.மண்டூர்) அன்றுகள்ளியங்காடு ஸ்ரீ புத்துநாகம்மாஆலயத்தில் 7ஆம் திகதி நடைபெறடற்றது மகாசிவராத்திரவிழாபூசையானது 1ம் சாமப் பூசைமாலை 6.00 மணிக்கும் 2ம் சாமப் பூசை இரவு 10.00 மணிக்கும் 3ம் சாமப் பூசைஅதிகாலை 1.00 மணிக்கும் 4ம் சாமப்பூசைஅதிகாலை 4.00 மணிக்கும் மிகவிமர்சையாகநடைபெற்றது.
1ம் சாமப் பூசைமுடிவுற்றதும் மட்ஃகள்ளியங்காடு ஸ்ரீ புத்துநாகம்மா ஆலய அறநெறிமாணவர்களால் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கலைநிகழ்ச்சிமுடிவுற்றதும் போட்டியில் பங்குபற்றிவெற்றியீட்டியமாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நான்குசாமப் பூசைகளுக்கும் கள்ளியங்காடு ஸ்ரீ புத்துநாகம்மா ஆலய அறங்காவலர் சபையினரும் சைவப் பெரும்மக்களும் அறநெறிமாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துசிறப்பித்தனர். இந்நிகழ்வின்போது ஆலய குருவானசிவஸ்ரீ த.தயாபரசர்மாக்கும், ஸ்ரீ புத்துநாகம்மா ஆலய அறநெறிஆசிரியர்களான செல்வி.ஜீ.காயத்திரி,செல்வி.ஜீ.கங்காசாயினிபொன்னாடைபோர்த்தி ஆலய நிர்வாகசபையினரால் கௌரவிக்கப்பட்டனர்.






































