விளாவெட்டுவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவ தீர்த்த உற்சவம்



(சின்னத்துரை புவிராஜ்)
மட்டு மாநகரின் தென்மேற்கே சுமார் 40 மையில்களுக்கு அப்பால் சங்கர்புரம் அமைந்துள்ளது. குறிஞ்சி முல்லை மருதம் என்ற நிலங்கள் பின்னிப்பிணைய ஆறும் குளமும் வயல் வெளிகளும் சூழ்ந்த சங்கர்புரம் எனும் பதியினில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் ஆகம முறைப்படி அழகுற அமைந்துள்ளது.

 23-03-2016 அன்று அதிகாலை இடம்பெற்ற விஷேட பூஜைகளை அடுத்து விநாயகப் பெருமான் அங்குசம் கையேந்தி பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் வெளிவீதியில் எழுந்தருளினார்.
பக்தர்களின் அரோகரா கோசமும் மங்கள வாத்தியமும் முழங்க கண்டாமணி அணி செய்ய  சங்கர்புர நாயகன் கம்பீரமாக திருவாசியோடு ஆரோகணிக்கப்பட்டார்.

14-03-2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2016/03/23 அன்று காலை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுபெற்றது