(கதிரவன் )
திருகோணமலை அருள்மிகு பத்தரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 13.03.2016 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து தினங்கள் உற்சவம் நடைபெறும். நேற்று வியாழக்கிழமை 17.03.2016 5ம் திருவிழா ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினுடையது. அம்பாள் பிள்ளையார் முருகன் சகிதம் மஞ்சம் வாகனத்தில் வலம் வந்துபக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22.03.2016 தேர்த்pருவிழா இடம்பெற உள்ளதுடன் மறுநாள் 23.03.2016 காலை 6.00 மணிக்கு சமத்திரா தீர்த்த உற்சவமும் நடைபெற உள்ளது.






















