(சுபஜன்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பின்புறத்தில் இரு எரியூட்டிகள் காணப்படுகின்றன. அதிலிருந்து வெளிவரும் கரும்புகை மனித உடலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இன்று அப் பிராந்திய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது அகற்ப்படும் மனித அவையவங்கள், சத்திரசிகிச்சைக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற கழிவுகள் இவ்விரு எரியூட்டிகளில் எரிக்கபடுகின்றது.
எரியூட்டிகளிலிருந்து வெளியேற்றப்படும் அபாயகரமான கரும் புகையினால், அருகில் உள்ள குடியிருப்பு செறிந்த பகுதியில் பரவி பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால் மக்களுக்கு மூக்கெரிவு, கண்எரிவு, சகிக்க முடியாத மணங்கள்,ஆஸ்துமா, புற்று நோய், கண் நோய், தோல் நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என இது தொடர்பில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பா.உ ச.வியாழேந்திரன் (அமல்) இது தொடர்பில் பல மணி நேரமாக மக்களுடனும் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரிடமும் ,மேலதிக அரசாங்க அதிபர், மாணகர உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர், சுகாதார வைத்தியஅதிகார ஆகியோருடன் உரையாடி இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.













