காணாமல் போனவர்களுக்காக நீதி வேண்டுமெனக் கோரி கவனயீர்ப்புப் பேரணி

(R.சயன் )
காணாமல் போனவர்களுக்காக நீதி வேண்டுமெனக் கோரி  அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை   உறவினர்கள் தலையில் வாசகங்கள் எழுதப்பட்ட கறுப்புப்பட்டிகளை அணிந்து கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.


'காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம்', 'ஜெனீவாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்' எனும் தொனிப்;பொருளில் காணாமல் போனோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.  இதில் 500 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்


ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய காணாமல் போனவர்களின் உறவினர்கள்;, அங்கிருந்து அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு பேரணி முடிவுற்றது.