இலங்கையில் அறிமுகமானது Google Street View


புகையிரத நிலைய வீதி - மட்டக்களப்பு 
(R.Sayan )  இலங்கையின் பாதை படத்தை ( Street View ) கூகிள் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது .
உங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும்.

 இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே பாவணைக்கு உள்ளது.

கிடைக்கும் பாதை படத்தை(Street view)  மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல விரும்பும்இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம்(Google Maps) தெரிவிக்கிறது.

கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நிலை படங்களைக் அணுக முடியும், அல்லது  வரைபடத்தின் கீழ் வலது மூலையிலிருக்கும் மஞ்சள் "pegman" Icon அழுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்று கொள்ளலாம்.

மட்டக்களப்பு

திருகோணமலை

தம்பிலுவில்
கல்முனை