கிழக்கில், ஊடகவியலாளர் தராகி சிவராமின் 11 வது நினைவேந்தல் நிகழ்வு - வீடியோ & போட்டோ

ஊடக சுதந்திரத்திற்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை கொடுத்த ஊடகவியலாளர் அமரர் தராகி சிவராம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் அம்பா​றை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பில் இடம் பெற்றது.

இதன்போது, ஊடகப் போராளி தராகி சிவராமின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவு சுடரேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தராகி சிவராமின் நினைவுப் பேருரையினை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா வழங்கினார். நினைவுரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர்களான வி.ரி.சகாதேவராஜா,தேவ அதிரன் போன்றோர் வழங்கினர்.

இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

(செய்தியாளர் - சண் சபா)