பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு தேசிய தொழில் தகைமை விருத்தி  சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு(01) வெள்ளிக்கிழமை உக்டா சமூகவள நிலையத்தில் இடம்பெற்றது.

பாலர் பாடசாலை ஆசிரியர்களின் தொழில் தகைமை விருத்தியை மேம்படுத்தும் பொருட்டு தேசிய தொழில் தகைமை விருத்தி கற்கைநெறி வழங்கப்பட்டு அக்கற்கைநெறியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு தேசிய தொழில் தகைமை விருத்தி தரம் 3 மற்றும் தரம் 4 சான்றிதழ்கள் 29 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.  

வேள்ட்விஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உக்டா நிறுவனமும் இணைந்து இக்கற்கை நெறியை வழங்கியிருந்தது. 

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் கணேசராசா, வேள்ட்விஸன் நிறுவன திட்ட இணைப்பாளர்களான ஆர்.அமுதராஜ், கீர்த், உக்டா நிறுவன தலைவர் இ.குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.