மட்டக்களப்பு - புன்னைச்சோலை ''கோப்ரா'' விளையாட்டுக் கழக புத்தாண்டு விளையாட்டு

மட்டக்களப்பு - புன்னைச்சோலை கோப்ரா  விளையாட்டுக் கழகத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழா நேற்று 16ம் திகதி நடாத்தப்பட்டது.

இவ் விளையாட்டு விழா புன்னைச்சோலை விளையாட்டு மைதானத்தில் "கோப்ரா"  விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில்  புன்னைச்சோலை ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாகத்தின் தலைவர் சி.ஞானப்பு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந் நிகழ்வு பல வருடங்களாக வருடா வருடம் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி நடாத்தப்பட்டு வருகின்றது. இதன்போது  கௌரவிப்பு நிகழ்வுடன், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.