புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று (20) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டது.
வெற்றிடமாகக் காணப்பட்ட பொலிஸ் மா அதிபர் பதிவிக்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய பாராளுமன்றில் கூடிய அரசியலமைப்பு சபையினால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த பரிந்துரைக்கு அமையவே ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின்னர், அதற்கான நியமனக் கடிதமும் வழங்கப்பட்டது.













