மட். வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி



இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டச் சங்கங்களின் 19 வயதிற்குட்பட்ட இளையோர் அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் முக்கியமான போட்டி ஒன்று நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கத்தின் தெரிவு அணிக்கும் கிண்ணியா கால்பந்தாட்ட லீக்கின் தெரிவு அணிக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானம் புனரமைப்புச் செய்யப்பட்டு வரும் நிலையில் கால்பந்தாட்டப் போட்டிக்குரிய மைதானம் தயார்செய்யப்பட்டு முதன்முதலில் இப்போட்டி வெபர் அரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.