மட்டக்களப்பு, நாவலடி அருள்மிகு புன்னையடி ஶ்ரீ நவசக்தி விநாயகர் தேவஸ்தான ஆவர்த்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிசேகத்தை முன்னிட்டு வினாயகப் பெருமானுக்கு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(24) இடம்பெற்றது.
கடந்த 22ம் திகதி கிரியாரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமான நிகழ்வு தொடர்ந்து நாளை 25ம் திகதி திங்கட்கிழமை கும்பாபிசேகம் வெகு சிறப்புடன் இடம்பெறவுள்ளது.
மிகப் பழமைவாய்ந்த இவ் ஆலயம், கடந்த காலத்தில் ஏற்பட்ட மூன்று அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டது. இதில் மூன்றாவது மிகப்பெரும் அனர்த்தமான சுனாமிப் பேரலையினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் அப் பிரதேச மக்களால் முழுமையாக அமைக்கப்பட்டு இவ் கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


































