வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் சேவைநலன் பாராட்டு விழா!

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் சேவைநலன் பாராட்டு விழாவும் ஆசிரியர் ஒன்றுகூடலும் இன்று(06) கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஏ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  திருமதி.கிருபைராணி மாரிமுத்து, இருதயராணி அன்டன் மகேந்திரராஜா,  மார்க்கண்டு வேணுகோபன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
அதிபர் தனதுரையில் ஆசிரியர்கள் ஏணி போன்றவர்கள்,மெழுகுவர்த்தி  போன்றவர்கள் மாணவர்களை உயரத்தில் ஏற்றிவிட்டு அவர்களின் வளர்ச்சியில் புளகாங்கிதம் கொள்பவர்கள். மாணவர்களின் அறிவுத் தீபத்தை ஏற்றுவதற்காக தாங்கள் மெழுகு போல் உருகி மாணவர்களை பிரகாசிக்க வைப்பவர்கள். இந்தப் பண்புகளின் ஒட்டுமொத்தமான வடிவம் தான் திருமதி.கிருபைராணி ஆசிரியர் அவர்கள் கணிதபாடத்தை மிகச் சிறப்பாக கற்பித்து மாணவர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்து சாதனை புரிந்தவர் என்றார். அதே போல் நீங்களும் ஆசிரியப்பணி செய்து சிறக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதே போல இருதயராணி அன்டன் மகேந்திரராஜா,  மார்க்கண்டு வேணுகோபன் ஆகியோர்; தமது சிறந்த கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளினூடாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதோடு மாணவர்களின் தனித் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து கல்விப்பணியாற்றியிருக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் பிரதி அதிபர் திரு.எஸ் மதியழகன், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், க்ல்விசாரா ஊழியர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.