மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமட்ட தமிழ்மொழித்தினப் போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று(11) திங்கட்கிழமை கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கிய மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.



















