மக்களால் தெரிவு செய்யப்படாத பாராளுமன்ற உறுப்பினர் சூட்சுமமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்று வடக்கு கிழக்கு இணைய விடமாட்டோம் என சவால் விடுவது பொருத்தமற்றதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளஇந்தப் பண்ணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் இன்று (09) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்,
உங்களது அரசியல் இலாபத்திற்காக பரம்பரையாக வாழ்ந்த மக்களைக் குழப்பக்கூடாது பிரச்சினை இருந்தால் நீதி, நியாயம் சரித்திரத்தின் அடிப்படையில் தீர்வைக் காண முயற்சிக்க வேண்டுமே தவிர பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்ந்தவர் தமிழ் பேசும் மக்களை குழப்பக்கூடாது.
செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன. தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும்.
'நாங்கள் தற்போது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். நாடாளுமன்றம், அரசியலமைப்புப் பேரவையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் 21 பேரடங்கிய வழிநடத்தல் குழு நிர்ணயிக்கப்பட்டு, அதனுடைய முதல் அமர்வு இடம்பெற்று, இம்மாதம் 28ஆம் திகதி மறுபடி வழி நடத்துக்குழு கூட இருக்கிறது. அதிகாரப்பகிர்வு என்பது கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள், கடந்த 35 வருடங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறோம்.
1987 முதல் பிரேமதாஸ காலத்தில், 2000 முதல் சந்திரிகா காலத்தில், ரணில் காலத்தில்இ மஹிந்த காலத்தில் என பல்வேறு பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வ கட்சிக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்களிடமும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. தற்போதும் தமிழ் மக்கள் பேரவை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். வடமாகாகண சபை தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். அரசியல் சாசன குழு என்பதுஇ பல்வேறு நிபுணர்களுடைய கருத்துக்களை வைத்துக் கொள்ளலாம். இதுபோன்ற நிலையில், மக்களுடைய கருத்துக்களை அறியும் வகையில் மக்களைச் சந்தித்து, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து தங்களுடைய அறிக்கையை இந்த மாதம் முடிவதற்கு முன் அரசாங்கத்துக்குக் கொடுக்க இருக்கிறார்கள்' எனக் கூறினார். 'இன்றைய சூழலில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட பிரிக்கப்படாத ஒற்றுமையான இலங்கை நாட்டுக்குள் முழுமையான விசுவாசமான இறைமையின் அடிப்படையில் அழிக்கப்படுகின்ற அதிகாரப் பிகிர்வின் ஊடாக, விசேடமாக வடக்குக் கிழக்கில் வாழுக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய பிறப்புரிமை உறுதி செய்யப்பட்டு, சமமாக, சமத்துவமான சமாதானமாக வாழக்கூடிய அடிப்படையை எமது மக்கள் அங்கிகரித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஏற்படுகின்ற தீர்வு, உறுதியானஇ நிலை நிற்கக் கூடிய அரசியல் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.
புனரமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணையில், கோழிப்பண்ணை மற்றும் மாட்டுப்பண்ணை ,ஆட்டுப்பண்ணை என்பனவும் இதன் போது திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண விவசாயஅமைச்சர் கே.துரைராஜசிங்கம் ,கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர்களான ஞா.ஸ்ரீநசன், சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்புமாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர்மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அதிகாரிகள்மற்றும் கால் நடை வைத்திய அதிகாரிகள் என பலரும் கொண்டனர்.
MMM












