மட்டு நகரில் வண பிதா வெபர் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டம் ஆரம்பம்



மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக் கழகத்தின் இணை அனுசரணையில் நடத்தும் A பிரிவு கழகங்களுக்கிடையிலான வண பிதா வெபர் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்டக் கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான திரு மா.உதயகுமார் அவர்களின் தலைமையில்  பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டியில் கோட்டைமுனை அணியை எதிர்த்து மட்டிக்கழி கதிரொளி அணி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.