(படுவான் பாலகன்) தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக்கழகம் பொதுமக்களின் ஆதரவுடன் நடாத்தும் சித்திரைப் புது வருட விளையாட்டு விழா எதிர்வரும் 2016.04.23ம் திகதி சனிக்கிழமை பி.ப.2.32மணிக்கு வெற்றி விநாயகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கழகத்தின் தலைவர் க.சந்திரு தலைமையில் நடைபெற்றவுள்ள விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன் மற்றும் சிறப்பு அதிதிகள், விசேட அதிதிகள், கௌரவ அதிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
விளையாட்டு நிகழ்வில் காலை 6மணிக்கு மரதன் ஓட்டமும் பிற்பகல் வேளையில் சறுக்குமரம் ஏறுதல், முட்டி உடைத்தல், கிடுகுபின்னுதல், பலகை ஓட்டம், இலக்கு ஓட்டம், தலையணைச்சமர், வீனோத உடை, ஓட்டப்போட்டிகள் மற்றும் பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கழகத்தலைவர் குறிப்பிட்டார்.













