சாதனை படைத்த மட்.பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய மாணவர்களை பாராட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட மண்முனைக் கோட்ட பாடசாலையான மட்/மமே/பாவற்கொடிச்சேனையில் இதுவரை காலத்தில் கடந்த 2014ம் ஆண்டு க.பொ.த.(சா.தர)ப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 10 பேர் சித்தியடைந்தமையே வரலாறாக காணப்பட்டது.

ஆனால் இம்முறை அதாவது 2015ம் ஆண்டு க.பொ.த.(சா.தர)ப் பரீட்சைக்கு தோற்றி மாணவர்களில் 17 பேர் சித்தியடைந்து இதுவரை காலமும் இல்லாத வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.

இவ்வாறு சாதனை புரிந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு கடந்த 07.04.2015 அன்று வியாழக்கிழமை பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் சு.ரவிசங்கர் தலைமையில் இடம்பெற்றது. 


இதில் அதிதியாக மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம் கலந்து கொண்டார், மேலும் எகெட் - ஹரித்தாஸ் நிறுவனத்தின் சமாதானக்குழு இயக்குனர் ஐ.கிறிஸ்டி அவர்களும், கிராசேவை உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், மாதர் அபிவிருத்திச் சங்க தலைவர், ஆலய தலைவர்கள், பெற்றார், பழைய மாணவர்கள், விளையாட்டுக் கழக தலைவர் , கல்வி அபிவிருத்திக் கழக தலைவர் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவரும் பாராட்டப்பட்டனர், அத்துடன் அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வெற்றிக்கு  வழிகாட்டிய எமது பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தின் இணைப்பாளர் மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) க.ஹரிகரராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.