மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் அருள்மிகு ஶ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய பரிவார மூர்த்தி நவக்கிரக மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் அருள்மிகு ஶ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய திருக்கோயில் பரிவார மூர்த்தி நவக்கிரகம் , சண்டேஸ்வரர் பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் திங்கட்கிழமை 25ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வையொட்டி இன்று 22ம் திகதி கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் 24ம் திகதி   திவ்விய ஹோமம், யாகபூசைகளைத் தொடர்ந்து காலை 8.00 மணிமுதல் 3.00 மணிவரை எண்னெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

மறுநாள் 25ம் திகதி திங்கட்கிழமை மஹோ கும்பாபிஷேகம் இடம்பெறும்.
கும்பாபிஷேக பிரதிஷட பிரதம குரு - சபரிமலை குரு சுவாமி சபரிதாசன் சிவாச்சாரிய மாமணி பிரம்ம ஶ்ரீ தனுவாசு தேவ சிவாச்சாரியார் தலைமையிலான குருமார்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.

அனைவரும் வருகைதந்து குமரப் பெருமானின் அருளைப் பெற்றேகுமாறு ஆலய நிருவாக சபையினர் அழைக்கின்றனர்.