மண்டபத்தடி மக்களுக்கான குடிநீர் விநியோகம்

கன்னங்குடா, மண்டபத்தடி கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த குடிநீர் பிரச்சனைக்கான தீர்வினை  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள்  பெற்றுக்கொடுத்தார்.
நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் பணிப்பின் பெயரில் பிராந்திய முகாமையாளர் பிரகாஷ் அவர்களின் வளிநடத்தலுடன் இக்குடிநீர் வினியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வரை பயன்பெறவுள்ளனர். அத்துடன் கரையாக்கன் தீவு கிராமத்துக்கான குடிநீர் விநியோகத்தினையும் இதன் ஊடாக வளங்க முடியும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.