கார்திகேசு தவமணிதேவி (கோட்டைக்கல்லாறு)கண்ணகி அம்மன் கோயில்வீதி
திருப்பெருந்துறை
மட்டக்களப்பு.
ஐயா! மேற்படி விலாசத்தில் வசிக்கும் தவமணிதேவியாகிய நான் அறியத்தருவது யாதெனில் எனது மகன் கார்த்திகேசு இராமகிருஷ்ணன் வயது 31 இவர் கடந்த 15 வருட காலமாக நீரழிவு, உயர்குருதி அழுத்தம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பட்சத்தில் இவரது இரு சிறுநீரகமும் செயலிழந்து விட்டது என தெரிவித்தனர்.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்தால் இவரது உயிரைக் காப்பாற்றலாம் என்று கூறுகின்றனர்.
நான் ஒரு விதவை பதினைந்து வருடகாலமாக வீட்டு வேலை செய்து எனது மகனை பராமரித்து வருகின்றேன். இதைவிட எந்த வருமானமும் இல்லாத நான் எனது மகனுக்கு அறுவைச்சிகிச்சை செய்து உயிரைக்காப்பாற்ற ஆசைப்பட்டாலும் நிதி வசதி இல்லை. இந்த வயது போன காலத்தில் எனது மகனுடன் மிகவும் கஸ்ரப்படுகிறேன்.
வசதிகொண்ட அமைப்புக்கள், மனித நேயமுள்ள உயர்ந்த உள்ளங்கள் எனது மகனின் உயிரைக்காக்க நிதி உதவி செய்யுங்கள். எனது மகனை நேரில் வந்து பார்வையிட்டு அதன் பின்னர் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து எனது மகனின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு இக்கடிதம் மூலம் இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
கார்திகேசு தவமணிதேவி
தொடர்புகளுக்கு : 0768884244
வங்கி கணக்கு இலக்கம் - 075-2-001-8-0018230
S.Thavamani Devi
Peoples Bank - Batticaloa













