நற்கரம் சமுக நலன்புரி அமைப்பினால் தரம்1 மாணவர்களுக்கு பயிற்சி நூல்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாலர்சேனை ம/மே காலசூரி வினாயகமூர்த்தி வித்தியாலயத்தில் கல்விபயிலும் தரம் 1 மாணவர்களுக்கு நற்கரம் சமுக நலன்புரி அமைப்பினால் பயிற்சி நூல்கள் அண்மையில் வித்தியாலயத்தில்வைத்து வழங்கிவைக்கப்பட்டது. 

கடந்த மாதம் 25ம் திகதி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் மாணவர்களுக்கு எதுவித கற்றல் உபகரணங்களோ, அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையில் கல்வி பயின்றுவருகின்றார்கள். இதனை கருத்திற்கொண்டு இச் சிறு உதவியினை நற்கரம் சமுக நலன்புரி அமைப்பு வழங்கியுள்ளது.


இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் நற்றகரம் சமுக நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க நிருவாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப் பாடசாலை மிகவும் கஸ்டப்பிரதேசமான வேப்பவெட்டவான் பகுதியிலுள்ள பாலச்சேனை கிராமத்தில், அங்குள்ள மக்களின் நம்மைகருதி கல்வி அதிகாரிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஒரு தகரகொட்டகையாகவே காணப்படுகின்றது.