பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு சிறந்த முறையில் புத்துயிர் ஊட்டவே ஊடகப் பிரிவு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. இதனால் ஊடகவியலாளர்கள் தமக்குரிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் எந்த பிரச்சினைகளும் இருக்காது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று (03) கண்டியில் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று (3 ) அதிகாலை கண்டிக்கு விஜயம் செய்து ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்து கொண்டார். மல்வத்தை மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து அவர் நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டார்.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் அவர் தெரிவித்ததாவது:
கலைக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு புனரமைக்கப்பட்டு மீண்டும் உடனடியாக செயற்படுத்தப்படும்.
ஊடக விழிப்பூட்டல் உட்பட இன்னும் பல புதிய அம்சங்களுடன் அதிகாரிகள் பலரைக் கொண்டு மீள இப்பிரிவு அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே தொழிற்பட்டுவந்த ஊடகப்பிரிவு 2ஆம் திகதியுடன் முற்றாகச் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள து.
மேலும் சில அடிப்படை விதி முறைகளின் கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவை மீண்டும் புத்துயிர் பெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக அது ஒரு அமைப்பாக அல்லது பலரைக்கொண்ட குழுவாக தொழிப்பட வைப்பது பற்றி பேசப்படுகிறது.
மூன்று சந்தர்ப்பங்களில் நான் கண்டியில் கடமைபுரிந்துள்ளேன். உதவி பொலிஸ் அத்தியட்சகராக, பின்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக, இறுதியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் கண்டியில் பணிபுரிந்தேன். அத்துடன் கண்டி எனது பாடசாலை அமைந்துள்ள பிரதேசம்,
முன்னைய பொலிஸ் மா அதிபர் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல பல சேவைகள் செய்து விட்டு ஓய்வு பெற்றுள்ளார். ஆகவே அவர் விட்ட இடத்தில் இருந்து அவர் பணியை தொடர உள்ளேன். இதற்கு ஊடக வியலாளர்கள் எனக்குஉதவ வேண்டும்
நாம் பொது மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும். அதேபோல் ஊடக வியலாளர்களது பணியும் முக்கியமானது. ஊடகவியலாளர்கள் தேசிய பொதுப்பணி ஒன்றை மேற்கொள்கின்றனர். சர்வதேச ரீதியாக எமக்கு அச்சுறுத்தல் வரும் இக்காலத்தில் ஊடக வியலாளர்களது பணி மிக முக்கியமானதாகும்.
உண்மை நிலையை எழுத வேண்டும் எனவும் புதிய பொலிஸ் மா அதிபர் கேட்டக்கொண்டார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













