விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி பலி


களுவாஞ்சிக்குடிப் பிரதான வீதியில் இடம்பெற்ற  மோட்டார் சைக்கில் விபத்தில் நாவிதன்வெளி சொறிக் கல்முனைப் பிரதேசத்தினைச் சேர்ந்த இளைஞர்  ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்


இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில் சொறிக்கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த நேமிநாதன் நிறோஜ் வயது 20 வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இருந்த சொறிக்கல்முனைக்கு வரும்போது செலுத்திவந்த மோட்டார் சைக்கிள்  கட்டுப்பாட்டை இழந்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு  அருகில் உள்ள மதகு ஒன்றில்மோதி படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்