சென்ஜோன் அம்புலன்ஸ் படைப்பிரிவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான குடிநீர் போத்தல்கள் உக்டா நிறுவனத்தினால் இன்று(08) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 350மாணவர்கள் 30ஆசிரியர்கள் மற்றும் பயிற்சிவிப்பாளர்களுக்கே போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இருந்து கலந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு சிறந்த குடிநீரை வழங்கும் பொருட்டும் அதிக வெப்பத்தினை கருத்தில் கொண்டும் இதனை வழங்கி வைத்தாக நிறுவனத்தின் பொருளாளர் மா.அருட்செல்வம் தெரிவித்தார்.
இதனை நிறுவனத்தின் பொருளாளர் மா.அருட்செல்வம், அதிபர் சி.அகிலேஸ்வரன் ஆகியோர் சென்ஜோன் அம்புலன்ஸ் படைப்பிரிவின் உதவி ஆணையாளர்களிடம் வழங்கி வைத்தனர்.

















