மாணவர்களின் கற்றல் சார்ந்த செயற்பாடுகள் குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் மாத்திரம் கட்டுப்படாமல் பிரக்ஞைபூர்வமான செயற்பாடுகளில் பல்வேறு புலமையாளர்களின் அறிமுகங்களையும் அறிவுகளையும் பரிமாறிக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அப் புலமைத் தேடலுக்கான களத்தினை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் பயிற்சிப் பட்டறைகளையும் சிறப்பு விரிவுரைகளையும் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் ஏற்படுத்திக் கொடுப்பது மரபு.
அச் செயற்பாட்டின் தொடர்ச்சியாகரூபவ் அமெரிக்க நாடக ஆசிரியரான பேராசிரியர் ஹார்லி எர்ட்மன் (Professor Harley Erdman, University of Texas at Austin) அவர்களால் 16.05.2016 அன்று நாடக எழுத்துருவாக்கப் பயிற்சிப்பட்டறையும் “பொற்கால ஸ்பெயின் பெண் நாடக ஆசிரியர்கள்: மொழிபெயர்ப்புரூபவ் தழுவலாக்கம் மற்றும் மீள்கண்டுபிடிப்பு” என்னும் தலைப்பில் (அதிதி) உரையும் நிகழ்த்தப்பட்டன. இவர் அமெரிக்க நாடக ஆசிரியர் மற்றும் நாடக புலமையாளர். சமகால லத்தீன் அமெரிக்க நாடகங்களை மொழிபெயர்ப்பவராகவும் தழுவலாக்கம் செய்பவராகவும் இருக்கின்றார்.
பதினேழாம் நூற்றாண்டின் மெக்ஸிக்கன் பெண் நாடக ஆசிரியர்களின் ஆக்கங்களை மொழிபெயர்த்து நூலாக்கம் செய்துள்ளார்.
அன்றைய நாளின் முதற் பகுதி நிகழ்வில்ரூபவ் காலை தொடக்கம் மதியம் வரையான நாடக எழுத்துருவாக்கப் பயிற்சிப்பட்டறையை பேராசிரியர் வழிநடத்தினார். சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் முன்பு உடற்பயிற்சி செய்து அதற்குரிய உடற்பாகங்களை புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமானதாக வைத்திருப்பது அவசியமானது எனக் கூறி அதற்கான சில பயிற்சிகளை பேராசிரியர் மாணவர்களுக்கு வழங்கினார்.
அப்பயிற்சியும் அவரின் கம்பீரமான குரலூடான வழிநடத்தலும் குறுகிய நேரத்தில் அனைவரையும் பட்டறைக்குள் கொண்டுவந்துவிட்டது.
உடற்பயிற்சி முடிந்த பின் நாடக எழுத்துரு தொடர்பான அடிப்படை விளக்கக்குறிப்புக்கள் கூறப்பட்டு அவர்களின் எழுத்தாற்றலை வலுப்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. பின்பு மாணவர்கள் சம்பவம் அல்லது கருப்பொருள் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்களை உருவாக்கிரூபவ் அதனை வாசித்துக்காட்டியதனூடாகவும் நிகழ்த்திக்காட்டியதனூடாகவும் நாடக எழுத்துருவாக்கப் பயிற்சிப்பட்டறை சுவாரசியமாகவும் பிரயோசனமாகவும் நகர்ந்து முடிந்தது.
அந் நாளின் மற்றைய பகுதியாக இரண்டு மணியளவில் “பொற்கால ஸ்பெயின் பெண் நாடக ஆசிரியர்கள்: மொழிபெயர்ப்பு தழுவலாக்கம் மற்றும் மீள்கண்டுபிடிப்பு” என்ற பேராசிரியரின் உரையும் பின் கலந்துரையாடலும் இடம்பெற்றன. ஷேக்ஸ்பியருக்கு அப்பாலும் நாடகங்களும் நாடக ஆசிரியர்களும் உண்டு அதிலும் பெண் நாடக ஆசிரியர்களின் பங்களிப்பும் இருந்திருக்கின்றது ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பேசப்பட்ட அளவிற்கு மற்றைய நாடகங்கள் பேசப்படவில்லை என்பதனூடாக தன்னுடைய உரையின் உள்ளடக்கங்களை முன்வைத்தார். ஸ்பெயினின் செழுமையான நாடக மரபில் பெண்களின் நாடகப்படைப்புக்கள் உச்ச வளர்ச்சிப்போக்கைக் காட்டியதோடு இப் பொற்காலமானது ஸ்பெயினுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த நாடக வரலாற்றுக்குமான பொற்காலமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றது என்பதையும் பேராசிரியரின் உரை சுட்டிக்காட்டத் தவறவில்லை.
உரையின் பின்னர் உள்ளடக்கம் சார்ந்த விடயங்கள் அதனோடு தொடர்புடைய பெண்ணிய நாடக அம்சங்கள் உயர்கல்வி மாணவர்களின் பாடத்திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டிய சமூகம் சார் விடயங்கள் சமகால அரங்கப்போக்குகள் என பல கருத்துக்களை உள்ளடக்கியதான கேள்விகள் விளக்கங்கள் கருத்துரைகள் ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு இட்டுச்சென்றது.
இதில் மாணவர்கள் விரிவுரையாளர்கள் துறைசார் செயற்பாட்டாளர்கள் ஆர்வலர்கள் என பலர் பங்கெடுத்ததோடு அன்றைய நாள் முழுவதும் பேராசிரியரின் புலமை ரீதியான அறிவுப் பகிர்வு அனைவரையும் ஆழப்படுத்தியது. மேலும் அவரின் சுறுசுறுப்பான செயற்பாடுகள் மாணவர்களுக்கு உற்சாகத்தினைக் கொடுத்ததோடு மாணவர்களின் ஆர்வமும் திறனும் பேராசிரியரை ஆச்சரியப்படுத்தியிருந்தது. இதன் வெளிப்பாடு தொடர்ச்சியாக பேராசிரியருடன் வேலை செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.
இது போன்ற பிரக்ஞைபூர்வமான நாடகச் செயற்பாடுகளில் புலமைமிக்க நாடகக்காரர்களைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதானது வளர்ந்து வரும் நாடகச் செயற்பாட்டாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. இச் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நன்றியினைத்தெரிவித்துக் கொள்வதோடு இது போன்ற சந்தர்ப்பங்கள் தொடர வேண்டியது அவசியமாகும்.
கி.திருச்செந்தூரன்


















