மட்டு. மாவட்ட செயலகத்தில் புகைத்தல் எதிர்ப்பு கொடி தினம் ஆரம்பம்!

புகைத்தல் , மது எதிர்ப்பு கொடி தின நிகழ்வு நடளாவிய ரீதியில் வாழ்வின் எழுச்சித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு செயற்படுத்ப்படுகின்றது. இந் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாயன்று மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு முதலாவது கொடியினை அணிவித்து கொடிதின நிகழ்வு மாவட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.


இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், வாழ்வின் எழுச்சி திணைக்கள தலைமையக முகாமைாளர் ஜே.எவ்.மனோகிதராஜ் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொதண்டனர்.

(சண் சபா)