கிழக்கு மாகாண நூலகப் பணியாளர்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட நூலகப் பணியாளர்களின் ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று திங்கட்கிழமை(02) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களைக்கொண்டு இயங்கிவரும் இவ் பணியாளர் ஒன்றியத்தினால் கடந்த காலங்களில் ஓய்வு பெற்று சென்றுள்ள நூலகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கலந்துகொண்டார்.
மேலும் இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபிக் உள்ளிட்ப பலர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.












