விவசாய அமைச்சர் தனது தலைமை உரையில் தொடர்ந்து குறிப்பிடுகையில், சாத்வீகம் எமது கொள்கை, சம்பந்தர் ஐயா எமது தலைவர், சமத்துவம் எமது இலக்கு இவற்றைக் கடைப்பிடிக்க எமக்குத் தேவை அர்ப்பணிப்பு விசுவாசம் விசுவாசமற்றவர்கள் சற்று விலகி நில்லுங்கள் நின்று நிதானித்து நிறைவு கண்டபின் எங்களோடு சேருங்கள் நடக்காது என்று நினைத்துக்கொண்டு ஏன் நடக்க வேண்டும்? இது நடக்கும் வகையில் நாம் நடப்போம் என்பது நமது தாரக மந்திரமாகட்டும்;.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத்திருவுளமோ? என்றான் பாரதி. நாம் கண்ணீரால் மட்டுமல்ல அதற்கு மேலாக செந்நீராலும் செழுமை மிக்க தியாகிகளின் விலைமதிப்பற்ற உயிர்களாலும் காத்திட்ட பயிர் இது.
இப்பயிர் வாழ்ந்திட வடிவமைக்கப்பட வேண்டிய செயற்திட்டம்தான் அரசியலமைப்புச் சட்டம். அதனை ஆக்கிடும் காலம் இது. அரசியல் நிர்ணய சபையிலே அரசியற்சட்ட உறுப்புரைகள் ஆராயப்படும் போது எமது கோரிக்கைகளை எவ்வாறு கோர்ப்பது? எப்படிச் சேர்ப்பது? என்றெல்லாம் எமது உறுப்பினர்கள் நுணுகி ஆய்ந்து நுணுக்கமாய்ச் செயற்படுவார்கள.; நாங்கள் தொடர்ச்சியாக மக்களிடமிருந்து பெற்ற வருகின்ற ஆணையை வரிப்படுத்தி, வகைப்படுத்தி வடித்தெடுக்க வழிவகை செய்வார்கள் .
பிராந்தியத்துக்கான அதிகாரம், பிரிக்கப்படாத நாடு, மக்களின் இறைமையை அங்கிகரிக்கும் கோட்பாடு, மத்திக்கென்று வihயறுக்கப்பட்டவை போக ஏனைய விடயங்கள் தொடர்பில் சட்டமாக்கும் அதிகாhம், கொடுக்கப்பட்ட அதிகாரங்களைப் பறித்தெடுக்காத பொறிமுறை, நிதிக் கையாள்கை, சட்டம் ஒழுக்கு, வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு உடன்படிக்கை, நில உடைமை, பிராந்திய நீதிசார் நடவடிக்கை என்பன தொடர்பாக நியாயப்படுத்தி இணக்காலபாட்டைப் பெற்று அரசியலமைப்பில் உறுதிப்படுத்தி நீடித்துநிலைத்துநிற்கக் கூடிய, சர்வதேசத்தின் கண்ணுக்கு நீதியானதென்று படக் கூடிய அரசியலமைப்பொன்றை ஆக்குவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படும்.
இவை சாத்தியமாக தொழிலாளத் தோழர்கள் எங்களோடு தோள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்போதும் உண்டு.
விதை நெல் பிரச்சினை, நெல் விற்கும் ;பிரச்சினை, மானிய உரப்பிரச்சினை, நீர்ப்பாய்ச்சலிலுள்ள பிரச்சினை, மேய்ச்சல் தரைப் பிரச்சினை, மீனவர்கள் எதிர்நோக்;கும் பிரச்சினை, ஏனைய தொழிலாளர்களின் பிரச்சினைகள், இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை, ஆசிரியர்கள் இடமாற்றுப் பிரச்சினை, நில அபிகரிப்பு, படையினரின் நில ஆக்கிரமிப்பு, நிர்வாக ஊழல் என்ற இற்னோரன்ன குறைபாடுகள் பற்றி அறிவோம்.
இவை தொடர்பான அம்புகள் எங்கிருந்து எய்யப்படுகின்றன என்ற மூலத்தை கண்டறிந்து அங்கு சென்று நடவடிக்கை எடுப்பதே அல்லாமல் அதனை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடுவதல்ல தீர்வைபெறுவதற்கான நடைமுறை என்பதிலே எங்களுக்குத் தெளிவும் தெரிவும் உண்டு. இவ்வகையில் எமது செயற்பாடுகளை இன்னும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில் உழைப்போம் என்றார்.












