சிவராமின் பார்வையில்... எமது ஊடகமும், அரசியலும். நிரப்பவேண்டிய இடைவெளி.'' - கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா

தமிழுலகு இதுவரை கண்ட பத்திரிகையாளர்களுள் பெரிய இடத்துக்குரியவராக மதிக்கப்படப் போகும் சிவராமின் மறைவை அவரது பத்திரிகை உலகப் புகழ்  அவரது மற்றைய திறமைகளை மறைத்து நிற்கின்றன என்றே கூறவேண்டும்.  என மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை,விரிவுரையாளர், கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா வழங்கிய நினைவுப் பேருரையில் தெரிவித்தார்.


ஊடகவியலாளர் அமரர் தராகி சிவராம் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் அம்பா​றை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து நேற்று (30) அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வில்,  சிவராமின் பார்வையில்...  ''எமது ஊடகமும், அரசியலும். நிரப்பவேண்டிய இடைவெளி.'' எனும்  பொருளுக்கமைவாக ஆற்றிய பேருரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


தமிழர் வரலாறு, இலக்கியம், போரியல் நுணுக்கங்கள் ஆகியவற்றில் சிவராமுக்கு உள்ள புலமை ஆழமும் பரப்பும் பெரும் வியப்புக்குரியவை. இத்துணை அறிவையும், விளக்கத்தையும் பெற்றிருந்த சிவராமின் மிகப்பெரிய சிறப்பு அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமைதான். என அமரர் சிவராமின் மறைறைவையொட்டி கூறிய இரங்கல் செய்தியில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தராகி, எஸ்.ஆர். எனப் பல புனை பெயர்களால் அழைக்கப்பட்ட சிவராம் தொடர்பான மதிப்பீடு ஓர் ஊடகவியலாளன் யார் என்பதை அடையாளப்படுத்தி நிற்கின்றது. 

உண்மையில் ஒரு பத்திரிகையாளன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சிவராமின் மொழியிலேயே சிவராமின் கருத்தை இங்கு முன்வைப்பது இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானது எனக் கருதலாம். ஒரு பத்திரிகையாளன் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் பொறுப்புடன் எழுத வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்களின் அரசியல் சிந்தனையை நெறிப்படுத்தும் வகையில் அவன் செய்தி முறையும் கொடுக்கும் தகவல்களும் அமையவேண்டும்.

ஏனெனில் இது  தொடர்பூடகங்களின் காலம், ஆனால், ஒரு பத்திரிகையாளன் பெறுப்புடன் எழுதுவதாயின் அவனுக்குப் பரந்த அறிவும், இடையறாத்தேடலும், நூல்கள், ஆவணங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கும் ஆர்வமும் இன்றியமையாதவை. மேலும் தமது கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் என்பதே என் அவா என சிவராம் இலங்கை இன முரண்பாடுகளின் வரலாறு என்னும் நூலுக்கு வழங்கிய முன்னுரையில் குறிப்பிட்டு இருப்பது தக்க சான்று எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன் வளர்ச்சிக்குச் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைக்குமுள்ள ஊடாட்டமானது சமூக வாழ்க்கையின் இயங்கு நிலைக்கு பல்வேறு வகையில் தொடர்பூடகங்களை அத்தியாவசியமாக்கியுள்ளது. இவை இன்றைய வாழ்க்கை முறையைப் பாதிப்பனவாக உள்ளன. 

அதிலும் பார்க்க மிக முக்கியமான யதார்த்தம் இந்த தொடர்பூடகங்களே நமது வாழ்க்கையை இயலுமானதாக ஆக்குகின்றன.இன்று தொடர்பூடகங்கள் சம்பந்தப்படாத வாழ்க்கை அம்சம் எவையுமேயில்லை எனக் கருதலாம். 

உண்மையில் இந்தத் தொட்:புச் சாதனங்களின் அடித்தளத்தில் இவற்றின் ஜீவசுருதியாக அமைவது மொழியே, உறவுகளை நிலைநிறுத்தி சமூகத்தை ஹஹஉள்ளதுஹஹ ஆக்குகின்றது. மிகுந்த அந்தரங்கமான உணர்வுகள் முதல் ஆட்சி அதிகாரத்தின் வெளிப்பாடுகள் வரை சகலதும் மொழிவழியாகவே நிற்கின்றன. ஆள் நிலை ஊடாட்டத்தில் ஆரம்பித்து ஒரு குழுமத்தின் ஊடாட்டத்திற்கு தளமாக அமைகிறது. உறவுநிலைத்தன்மைகளின் பரிமாண வேறுபாடுகள் மொழியின் வெளிப்பாட்டுக் கனதியையும் வேறுபடுத்தத் தொடங்குகிறது. இங்கு பேச்சு, எழுத்து ஆகின்றது. 

இது ஒரு சமூக நிர்ப்பந்தமும் கூட, பேச்சுக்கான கேள் மட்டம், அல்லது செவிமடுத்தல் மட்டம் விரிவடைய வேண்டிய நிலையில் எழுத்து பேச்சின் ஏற்ற இறக்கங்களை, நெளிவு சுழிவுகளை எடுத்துக்காட்ட வேண்டியதாயிற்று. இந்தத் தொடர்புத் தேவைகளே ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் முக்கியப்படுத்துவதாகவும் முக்கியமானவர்களாகவும் ஆக்குகின்றது எனலாம். 

இவ்வகையில் தொடர்பூடகங்களின் மொழியின் வெளிப்பாடுகள் அவ்வூடகங்களின் தன்மையினாலேயே தீர்மானிக்கப்பட்டன. உற்பத்தி முறைகளும், உற்பத்திப்பரிமாணங்களும், நுகர்வுத் தேவைகளுடனும், நுகர்வு வட்டங்களுடனுமான இணைவு அதன் வளர்ச்சி நிலையைத் தீர்மானித்தன. ஆனால், இன்று வரும் தமிழ் எழுத்துக்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் தொடர்பூடக எழுத்துக்களே என்பதை எடுத்துக்காட்டும் ஊடகம் மூலம் அல்லாது இன்று எழுத்து வெளிவருவதில்லை. இந்தப் பின்புலத்தில் இன்றைய தொடர்பூடகங்களில் அநேகமானவற்றில் மொழி பயிலப்படும் முறை திருப்தியற்றது. 

அச்சுப்பிழை, உச்சரிப்புப்பிழை, கருத்தியல் மயக்கம், பொருள் மயக்கம், தலைப்புக்குப் பொருத்தமான செய்தியிடல் இன்மை, எதற்கு முக்கியத்துவம் அளித்தல் என்பதில் தெளிவின்மை, சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளில் பக்கச்சார்பைக் கடைப்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகள், குறைபாடுகள், ஒத்தூதுதல், இருட்டடிப்புச் செய்தல், ஒருபக்கம் சார்பாகச் செயற்படல், எனப் பல்வேறு சிக்கல் நிலைகள் இன்று ஊடகத்துறையில் மலிந்து காணப்படும் பிரச்சினைகள் ஆகும். இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது ஊடகத்துறைசார்ந்த ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்.

ஒரு ஊடகவியலாளனின் தொழில் நேர்மையும் விசுவாசமுமே ஒரு சமுதாயத்தின் ஊன்று கோல் அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு சமுதாயம் அந்த ஊன்றுகோலைப்பிடித்து எழுந்து நிற்கமுடியும். இந்த அரசியலை ஊடகத்துறை செய்ய வேண்டும். ஏனெனில் ஊடகத்துறை என்பது அரசியல் சார்ந்ததாக அவசியம் இருந்தேயாகவேண்டும்.  ஏனென்றால் மனிதனுடைய அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் சார்ந்தனவாகவே இருக்கின்றன. 

அந்த நடவடிக்கைகளில் ஊடகத்துறையும் ஒன்று. அரசியலில் இருந்து ஊடகத்துறையைப்பிரிக்க முனைவோர் நம்மை ஒரு தவறான பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்கின்றனர். ஊடகத்துறை என்பது ஓர் ஆயுதம். மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் இந்த ஒரு காரணத்துக்காகவே ஒருவர் பேனா முனையில் போரிட வேண்டும் என்ற உணர்வுடன் செயற்பட்ட ஒரு ஊடனச் செயற்பாட்டாளன் சிவராம். ஆவ்வாறே தான் சார்ந்த ஊடகத்துறையினரும் தங்கள் சமூகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என முழங்கியவன். 


உண்மையில் ஊடகத்துறை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்பதனாலேயே ஆளும் வர்க்கம், அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து அதனைத் தம் ஆதிக்கத்திற்கான கருவியாகப் பயன்படுத்திடவும் முயன்று வருகிறது. இம் முயற்சியில் ஈடுபடும் ஆளும் வர்க்கத்தின் ஹஹஊடகத்துறைஹஹ என்பதன் கருத்தாக்கத்தைத் ( ஊழnஉநிவ ) திரிக்கவும் செய்கின்றனர். ஆனால் ஊடகத்துறை என்பது மக்கள் விடுதலைக்கான ஓர் ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை ஊடகவியலாளரர் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் அப்போது சரியான பாதையில் வழிப்படுத்த முடியும். 

ஏனெனில், உணர்ச்சியும், அனுபவமும், மனிதனது இதயத்திற்கு நெருங்கியவை. அரசியல் கருத்துக்களோ யாவருக்கும் பொதுவானவை. வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு உடையனவல்ல என்று சிலர் கருதக்கூடும். ஆனால் அத்தகைய கருத்துச் சரியானதா என்று ஒரு சிறிது சிந்தித்துப்பார்த்தல் தகும். நமது காலத்தில் அரசியல் கருத்துக்களும், சித்தாந்தங்களும் எத்தனையோ மனித உள்ளங்களிலே ஆழ்ந்த உணர்ச்சியைக் கிளறிவிடவல்லனவாயுள்ளன. எத்தனையோ மக்களின் மனங்களில் குணங்களை நிச்சயிப்பனவாயிருக்கின்றன. எனவே நேர்மையோடு சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் எந்த ஓர் எழுத்தாளனும் அரசியல் சிந்தனைகளைப் புறக்கணிக்க முடியாது என்ற கருத்தாக்கத்தில் சிவராம் மிகத் தெளிவுடன் செயற்பட்டவர். 

இதனால் தான் தமிழர் அரசியலில் இன்று நிலவும் பல குறுபடிகளுக்கு எமது வரலாற்றைப் பற்றிய தெளிவின்மையும், அறிவின்மையும் முதன்மைக் காரணங்களாகும் எனக் கூறினார். இலங்கையின் சிங்களப் பெரும்பான்மை அரசுகள் காலத்திற்குக்காலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற பேரில் கிளப்பிவிடும். புரளிகளும் அவற்றைப் புதுமையாகத் தமிழ் மக்களுக்குக் காட்ட முற்படுபவர்களின் நாடகங்களும் எமது அரசியல் வரலாறு பற்றிய அறியாமையாலேயே சாத்தியமாகின்றது. 

ஏனென்றால் எவருக்குமே வரலாறு தெரியாது அல்லது வரலாற்றை அறிந்தவர்கள் வாய்மூடியிருப்பார்கள் என்ற முட்டாள்தனமாக வீறாப்பில்தான் இன்று தமிழ் மக்களின் தலைகளில் அரசியற்குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர் பல தலைவர்கள். 

அவர்கள் இங்கனம் செய்வதைத் தட்டிக்கேட்க ஆளில்லாமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. இன்று 18லிருந்து 30 வயது வரையுள்ள தமிழ் ஆண்களையும், பெண்களையும் எடுத்துக்கொண்டால், எமது விடுதலைப் போராட்டம் கூர்மை அடைந்து ஆயுதப்போராட்டமாக முனைப்புப் பெற்ற 1970இல் இருந்து 1983 வரையான காலகட்டத்தில் ஒன்று அவர்கள் பிறந்து இருக்கமாட்டார்கள். அல்லது அரசியல் பிரக்ஞை பெறும் வயதை எட்டியிருக்க மாட்டார்கள்.

எனவே தமிழ் அரசியலின் எதிர்காலப் போக்கினைத் தீர்மானிக்கின்ற அடிப்படைக் கூட்டமாகவுள்ள இவர்கள் மீது எந்த வரலாற்றுக் குழறுபடியையும் திணித்து தமது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைக் கொண்டு நடத்தக்கூடிய சூழ்நிலையை எமது அரசியல்வாதிகள் இன்று அனுபவிக்கிறார்கள் என சிவராம் எழுதியிருப்பதும் தமிழரின் அரசியல் வரலாற்றைக் குறிப்பாக இனப்பிரச்சினை சூழ்கொள்ளத் தொடங்கிய 50களில் இருந்து தெளிவாக யாரும் அறிந்துகொள்ள முடியாமைக்கு முக்கியமான நான்கு காரணங்களை இலங்கையின் இனமுரண்பாடுகளின் வரலாறு என்னும் நூலின் முன்னுரையில் முன்வைக்கின்றார் சிவராம். அக்கருத்தினை  இங்கு தொகுத்துத் தருவது பொருத்தமானது எனக் கருதலாம்.

1.  பல்கலைக்கழகம் சார் தமிழ் அரசியற்துறைப் பேராசிரியர்களின் ஆர்வமின்மை.

2. அரசியல் ஆவணங்கள் செய்தித்தாள்கள் போன்றவற்றை ஒரு தமிழ் ஆய்வாளன் இலகுவாகப் பொற்றுக் கொள்ள முடியாத தடங்கல்கள்.

3. 50களுக்குப் பிற்பட்ட தமிழரின் அரசியல் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தவர்களும், அதன் முக்கிய பாத்திரங்களாக இருந்தவர்களும் தத்தமது இன்றைய அரசியல் நலன்களையும், நம்பிக்கைகளையும், கருத்துக்களையும், முதன்மைப்படுத்தி அவற்றுக்கேறற வகையில் தாம் கடந்து வந்த பாதையின் சில அத்தியாயங்களை மறைப்பதும், திரிபுபடுத்துவதும் வரலாற்றைச் சரியான முறையில் பதிவதற்கு இன்னொரு தடைக்கல்லாக உள்ளது. (இது நீக்க முடியாத சாபக்கேடல்ல எனக்குறிப்பிட்டு இருப்பதும்)

4. ஆயுதப் போராட்டம் தவிர்ந்த தமிழரின் அரசியற் பிரச்சினை பற்றிய ஓரளவு முழுமையான சீராகவும், நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து தெளிவாக எழுதப்பட்ட வரலாறு என்று சொல்லக்கூடிய நூலாக அண்மையில் மறைந்த பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் ஹஹஸ்ரீலங்காவின் உடைவுஹஹ ( வுhந டீசநயமரி ழுக ளுசடையமெய) கொள்ளப்படுகிறது. இது ஒருவகையில் உண்மையெனினும் தமிழ் அறிவற்ற அல்லது அரைகுறையாகத் தெரிந்த மேட்டுக்குடித் தமிழ் அரசியற் தலைமைகளுக்கும், சிங்கள அரசுகளுக்குமிடையில் நடைபெற்ற உயர் மட்டப் பேரம் பேசல்கள் இழுபறிகள், சட்டச் சிக்கல்கள், என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தாலும் தமிழர் அரசியல் பிரச்சினை பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில ஆய்வுக்கட்டுரைகளும் அமைந்துள்ளன. 

தமிழ் அரசியலில் உந்து சக்தியாகவிருந்த தமிழ் மொழிக்கல்வி வழிவந்த இளைஞர்களும் தேசிய உணர்வால் உந்தப்பெற்ற தமிழ் மக்களும் என்ன செய்தார்கள். என்ன பேசினார்கள், என்ன எழுதினார்கள் என்பதைப்பற்றியெல்லாம் இந் நூலிலோ தமிழ் அரசியல் பற்றி வந்துள்ள சில ஆங்கியலக்கட்டுரைகளிலோ நாமறிந்து கொள்ள முடியாது எனக்கருதியதும்,

தமிழ் ஊடகத்துறையை நவீன தொடர்பு சாதன வளர்ச்சியோடு ஆற்றுப்படுது;தியும், விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டியும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றிய முழுமையான தமிழர் அரசியல் வரலாறு எழுதப்படுவதற்கும் நாம் அரசியல் அறிவு பெற்று நமது இன உரிமைப் போராட்டப்பாதையில் தெளிந்த சிந்தனையுடன் முன்னேறிச் செல்ல வேண்டுமென வழி காட்டி நின்றவர் அமரர் டி.சிவராம்.

உண்மையில் சிவராம் ஒரு ஊடகப் போராளி தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும், தமிழ் பண்பாட்டையும், நேசித்த ஒரு போராளி. அவரது சிந்தனைகள், கருத்துக்கள், எழுத்துக்கள், அனைத்தும் இதையே வியாபித்திருந்தன. அவரது கருத்துக்கள் தூர நோக்குக் கொண்டவை தீர்க்கதரிசனம் மிகுந்தவை. இன்று சிவராம் பிரிக்கப்பட்டு 11 வருடங்கள் நிறைவெய்தி இருக்கின்றன. ஆனால் அவரது கருத்துக்கள், எழுத்துக்கள் மக்களிடமிருந்து பிரிக்கப்படவில்லை. அவற்றைப் பிரிக்கவும் முடியாது சித்தாந்தவாதிகளின் ஒழிக்கப்படலாம் அவர்களது கருத்துக்கள் ஒழிக்கப்படமுடியாதவை அவை என்றும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும். இது சிவராமுக்கும் பொருந்தும்.

சிவராம் உரிமையின்றி உணர்வு கெட்டு வாழ்வதைவிட உரிமைக்காக உணர்வு கொண்டு எழுதுவதே மேல் என்ற உணர்வுடன் செயற்பட்டவர். தனது இறுதி மூச்சிருக்கும் வரை தமிழ் தேசியத்திற்காகவும், அதன் நலன்களுக்காகவும் உழைத்தவர். ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் அவரது கருத்துக்களும், எழுத்துக்களும், அதையே வெளிக்காட்டி நிற்கின்றன. சிவராம் போன்ற ஊடகவியலாளர்களது இடம் இன்னும் நிரப்பப்படமலே இருக்கிறது. அதற்கு இன்றைய ஊடகவியலாளர்கள் மிக நீண்ட தூரம் பயணிக்கவேண்டும். இவ்விடைவெளி தமிழ் ஊடகத்துறை வரலாற்றுக்குப் பெரும் சாபக்கேடே. 

உண்மையில் சிவராம் ஊடகத்துறையில் செயற்பாட்டாளராக எத்தகையவர்கள் அல்லது எப்படிப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று சிந்தித்தாரோ. அதே போல் அரசியற்துறை சார் தலைவர்களும் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் எனச்சிந்தித்தார். 

இந்தச் சிந்தனை ஓட்டங்களே தேசிய நலனும், நேர்மைத்திறனும்,  சரியான வழிகாட்டலும்,  தெளிவான சிந்தனையும், தூரநோக்கும், மொழித் தேர்ச்சியும், பண்பாட்டுப் பேணுகையும், தொழில்நுட்பத்திறனும் மிகுந்த அரசியல் சமூகப் பொருளாதார வரலாற்றுத் தெளிவு மிக்க, நற்சிந்தனை வாய்ந்த ஊடகவியலாளர்களும், அரசியற்தலைவர்களுமே சிவராமின் பேச்சிலும் எழுத்திலும் எதிரொலித்தன. அந்த எதிரொலிப்பின் தொகுப்பே இந்த நினைவுரை எனக்கூறி, இந்த இடைவெளியை எமது ஊடகமும் அரசியலும் நிரப்ப வேண்டும். 

என இந் நிகழ்வில் உரையாற்றினார்.

(செய்தியாளர் - சண் சபா)