இடைவிடாத பயிற்சி மூலமே விளையாட்டுகளில் வெற்றியீட்ட முடியும் பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம்

(ஷமி.மண்டூர்) பிரதேச செயலக பிரிவுமட்டத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளிலே போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவு 14 பிவுகளில் போட்டியிட்டு கடைநிலையில் இருந்ததாகவும் இவ்வாறான நிலை ஏறக்குறைய கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் உரிய நேரத்தில் இந்தப்பிரதேச செயலகப்பிரிவிற்கு ஒரு விளையாட்டு உத்தியோகஸ்தர் நியமிக்கப்படாமல் இருந்தமை கவலையழிக்கப்படுவதாகவும். கடந்த பத்து ஆண்டுகளாக இந்தப்பிரதேசம் விளையபட்டு துறையில்  புறக்கணிக்கப்ட்டு வருவதாக என போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் குறிப்பிட்டார்.

கோவில் போரதீவு இளைஞர் எழுச்சி ஒன்றிய கலை விளையாட்டுக் கழகம் நடாத்திய விளையாட்டு விழா 08 ஞாயிற்றுக்கழமை கோவில் போரதீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் வே.தில்லைநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் அரச உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.அவர் மேலும் பேசுகையில்

பிரதேச செயலகமட்டங்களில் குறிப்பிடதக்க அளவு திறமையான வீரர்களை அடையாளம் கண்டிருந்ததாகவும் அவர்களை மாவட்ட மட்டங்களில் கொண்டு செல்லும் போது அவர்கள் விளையபட்டுக்களில் மாவட்டரீதியாக வெற்றியீட்டபடவில்லை இந்த கவலைக்குரிய விடயத்தை இந்த இடத்தில் கூறுகின்றேன். அதற்கான காரணம் அவர்களின் தொடர்ச்சியான அர்பணிப்பு,அவர்களின் விளையாட்டுப்பயிற்சி இல்லாமையே இதற்கான காரணம் இப்படியான நிலைகளில் இருந்து நாங்கள் மாறவேண்டும் எதிகாலத்தில் மாவட்ட,மாகாண மட்டப்போட்டிகளில் நாங்கள் சென்று வெற்றியீட்டவேண்டும் 

இன்று பாருங்கள் இந்த விளையாட்டு நிகழ்வில் இந்தப்பிரதேச பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை இந்தப்போட்டி நிகழ்வுகளில் வெளிப்படுத்துகினறனர் அந்தவிடையம் மிகவும் பாராட்டத்தக்க விடையம்  என்று குறிப்பிட்டார்.