தேசிய நீர் உயிரினங்கள் கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் வாகரை நன்னீர் மீன்பிடி அமைப்பினர் வெளி நடப்பு !

(கோபி) மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 வாவிகள் காணப்படுகின்றது. இலங்கையில் களப்பு கூடிய மாவட்டகளில் மட்டக்களப்பு இரண்டாம் இடத்தை பிடிக்கின்றது. இது இப்படி இருக்க இன்று வாகரை வாவி இயற்கை வளங்களை அதிகமாக கொண்டு காணப்படுகின்றது. 

இந்த வருட தொடக்கத்தில் நெக்டா நீரியல் துறை அமைப்புடன் இணைந்து மாவட்ட செயலகம் வாகரை பனிச்சங்கேணியை மையமாக கொண்டு இறால் பண்ணை அமைப்பது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ப்படுவதாக அறிந்தோம். இதற்கு 03 தடவை பலத்த எதிர்ப்பினை மக்களாகிய நாங்கள் வெளிகாட்டியமை யாவரும் அறிந்ததேயாகும். 

எனினும் இன்று 2016.05.20 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வாகரையில் இறால் பண்ணை அமைப்பது தொடர்பாக கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் வாகரை நன்னீர் மீன்படி அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  இதில் அதிகாரிகள் இத்திட்டம் அபிவிருத்தி சார்ந்தது எனவே இதனை எவ்வாறாயினும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர். 

இதன் போது வாகரை நன்னீர் மீன்பிடி சங்க பிரதிநிதிகள் இத் திட்டத்திற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். வாகரை பிரதேசத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால்,
  • கண்ணா மரங்கள் அழிவடையும்
  • இதனால் மீன், இறால், நண்டு இனத்தின் இனப்பெருக்கம் குறைவடையும்
  • இதனால் வாகரை நன்னீர் மீன்டி தொழிலாளர்களிள் வாழ்வாதாரம் பாதிப்படையும்
  • கால்நடை வளர்ப்பாளர்கள் இடப்பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்று தமது கருத்துக்களை முன்வைத்தனர். 
மேலும் இவர்களால்,
  • மட்டக்களப்பில் இறால் பண்ணை மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாலை வனங்கள் ஆக்கப்பட்டுள்ளன (கொக்கடிச்சோலை, திருப்பெருந்துறை) என்றும்
  • புத்தளம் மாவட்டத்தில் நன்னீர் இல்லாமையினால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும்
  • இயற்கையான மீன், நண்டு வகை இன்று புத்தளத்தில் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது என்றும் தமது உதாரணங்களையும் முன்வைத்தனர். 
இதனாலேயே தாங்கள் இத்திட்டத்தை எதிர்க்கின்றோம் என்று கூறினார்கள். இதனால்; வாகரை நன்னீர் மீன்பிடி சங்க பிரதிநிகளுக்கும், அதிகாரிகளுக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட வாகரை நன்னீர் மீன்பிடி அமைப்பினர் வெளி நடப்பு செய்தனர்.

இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாணசபை அமச்சர் கே;.துரைராஜசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜீ.கிருஸ்ணப்பிள்ளை, இ.பிரசன்னா, எம்.நடராஜா, ஆர்.துரைரெட்ணம், சிப்லி பாருக் ஆகியோரும் கலந்துகொண்டனர். 


இத்துடன் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


 


தகவல்: வாகரை நன்னீர் மீன்பிடி  அமைப்பினர்.