இந்து சமய அறநெறி கல்வி கொடி வாரம் ஆரம்ப நிகழ்வு


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து பண்பாட்டு நிதியத்தினால் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறி கல்வி கொடி வாரம் 2016 நிகழ்வு நேற்று (24) மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


மண்முனை மேற்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி.ரி.சர்மிளா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முதலாவது கொடியினை மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுக்கு வழங்கி நிதியினை சேகரிக்கும் நிகழ்வு ஆரம்பமானது.


இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர்கள், இந்துசமய கலாசார உத்தியோகத்தர் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்து சமய அறநெறி கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக இந்து சமய அறநெறி கல்வி கொடி வாரம் திருஞான சம்பந்தரின் குருபூசை தினமாகிய மே 24 ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.