அனாகிழக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் என்ன என்பதை தெளிவாக நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம் என்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.
மீராவோடை பாடசாலை குறுக்கு வீதிக்கு வடிகானுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இரவு இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
மாகாண சபைக்குறிய அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துகின்ற மாகாண சபையாக கிழக்கு மாகாண சபை இன்று இருந்து கொண்டு இருக்கின்றது இன்னும் இருக்கும் மாகாண சபை அதிகாரத்திற்குட்டபட்ட அனைத்து வேலைகளைச் செய்கின்ற மாகாண சபையாக நாங்கள் இருந்து வேலை செய்து கொண்டு இருக்கின்றோம் எந்தவித இன மத வேறுபாடுகளையும் மறந்து நாங்கள் தமிழர்கள், சிங்களவர் முஸ்லீம் என்ற வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் எல்லா பிரதேசங்களிலும் எங்களது வேலைத்திட்டங்களை சரியாக செய்து வருகின்றோம்.
இந்த நாட்டில் முதன் முதலாக நல்லாட்சியை உறுவாக்கிய பெருமை கிழக்கு மாகாண சபைக்கே உரியது அனைத்து கட்சிகளையும் பங்காளிக்கட்சிகலாக இணைத்து ஆட்சி செய்து வருகின்றோம் முதலமைச்சருக்கு பிரச்சினை என்ற போது மாகாண சபையில் உள்ள இரண்டு உறுப்பினர்களைத்தவிர மற்றய 34 உறுப்பினர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பாக சிங்கள உறுப்பினர்கள் கதைத்தார்கள் அவ்வாறு ஒற்றுமையாகத்தான் எங்களது மாகாண சபையை நடாத்தி வருகின்றோம் என்று தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உரையாற்றுகையில்.
இன்று சில இனவாதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீதுள்ள பிரச்சினையை ஒரு பூதாகரமாக மாற்றிக் கொண்டு தங்களது கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
முதலமைச்சர் கடற்படை அதிகாரியை தாக்கவில்லை கெட்டவார்த்தைப் பிரயோகங்கலால் திட்டவில்லை அவர் சொன்னவார்த்தை நீ நடந்து கொண்ட முறை பிழை என்றுதான் ஆனால் முதலமைச்சர் பிழையாக நடந்து கொண்டார் என்று கடந்த அரசாங்கத்தில் பொலிஸ் அதிகாரியின் சேட்டைப்பிடித்து இழுத்த விமல் வீரவன்ச இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றார் இதே போன்று கிழக்கு முதலமைச்சர் முப்படைக்கும் எதிரானவர் என்று சித்தரிக்கபடுகின்றது இதனைப்பயன்படுத்தி பெருமான்மை சமுகத்தைச் சேர்ந்த பௌத்த குரு முதலமைச்சரின் வீட்டுக்கு வந்து தன்னுடைய செயற்பாட்டை காட்டிய விதம் பௌத்த தர்மத்திற்கு மாற்றமான ஒரு செயலாகும்.
பௌத்த குரு பிரயோகித்த வார்த்தைப்பிரயோகம் ஒட்டு மொத்த முஸ்லீம் சமுகத்தையும் கேவலப்படுத்தும் செயலாக அமைந்திருந்தது இதனை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
நாங்கள் பொறுமையாக இருப்பதால் கோழைகள் என்று எவரும் நினைத்துக் கொள்ளக்கூடாது எங்கள் இனத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக போராடவும் தெரியும் ஆனால் பொறுமை காத்து செயற்பாடுகளை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளதால் அதனை கடைப்பிடித்து செயற்பட்டு வருகின்றோம்.
இவ்வாரான இனவாத செயற்படுகளை கடந்த அரசாங்கம் விட்டு வைத்திருந்ததால்தான் சிறுபான்மைச்சமுகம் ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பியது அந்த நிலமை மீண்டும் இந்த அரசாங்கத்திற்கு வந்து விடக்கூடாது நாங்கள் நல்லாட்சி மலர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தது மஹிந்தவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன வரவேண்டும் என்பதற்காகவல்ல ஆட்சி மாறவேண்டும் சிறுபான்மை மக்களின் பிரச்சினை ஆட்சியாளர்களின் காதுகளுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினோம் என்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பத்து லட்சம் ரூபா நிதியளிப்பில் அமைக்கப்படவுள்ள இவ் வடிகால் அமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சாபி தலைமையில் இடம் பெற்ற போது கிழக்கு மாகான முதலமைச்சு, உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ், கிழக்கு மாகான வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எச்.எம்.எம்.மீராமுஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
















