குளம் உடைப்பெடுப்பு

(கதிரவன்,   எப்.முபாரக்   )

தம்பலகாமம் மேற்கு பகுதியில் உள்ள உல்பத்த குளம் ஞாயிற்றுக்கிழமை 22.05.2016 காலை உடைப்பெடுத்துள்ளது. 15 நீளமான அணைக்கட்டில் இவ் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குளத்தில் தேக்கி வைக்கப்படடிருந்த 28 அடி நீரும் முற்றாக வெளியேறி உள்ளது.  200 ஏக்கர் கன அடி நீரை கொள்ளக்கூடியதாக இக்குளம் உள்ளது.


தம்பலகாமம் பிரதேச  செயலாளர் திருமதி ஜெயா ஸ்ரீபதி நேரில் சென்று உரிய நடவடிக்கைககைளை மேற்கொண்டார். இக்குளத்தில் இருந்த வெளியேறும் நீர் அருகில் உள்ள புலியூற்றுக்குளத்தில் தேக்கி வைக்கப்படுகின்றது. இக்குளம் நிறைவடையும் பட்சத்தில் வான் ஏற்பட்டால் அருகில்  உள்ள ஜெயபுர், பத்தினிபுரம் கிராமங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிலமையை சமாளிக்க பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டள்ளனர். இப்பகுதி மக்களை சற்று அவதானமாக இருக்குமாறு பிரதேச  செயலகத்தினராலும் பொலிசாராலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.