(படுவான் பாலகன்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமசேவையாளர் பிரிவின் பூனையாண்டவாடி அணைக்கட்டு எனும் இடத்தில் நீரில் மூழ்கி 12வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இன்று(10) வெள்ளிக்கிழமை மாலை 3.50மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுவன் மாவடிமுன்மாரி கிராமசேவையாளர் பிரிவின் வண்டியாமடு எனும் இடத்தில் வசித்த கனகராஜன் ஜிவிதன் என இனங்காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தனது வீட்டிலிருந்து 300மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பூனையாண்டவாடி அணைக்கட்டு வாய்க்காலில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















