மட்டக்களப்பு மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் மாபெரும் உற்பத்திக் கண்காட்சி



இக் கண்காட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக்கான சிறந்த சந்தை வாய்ப்பினை அதிகரிப்பதற்காகவும் அவர்களை தனிப்பட்ட ரீதியாக ஊக்குவிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் '‘வீ எபெக்ற் We Effect'’ நிறுவனத்தின் நிதி அணுசரணையுடன், காவியா' பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட உள்ளது என்பதனை மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம்.

இவ் உற்பத்திக் கண்காட்சியில் நீங்கள் கலந்து கொண்டு உங்களால் கூறப்படும் ஆலோசனைகளும், வாழ்த்துக்களும் எமது மாவட்டத்திலுள்ள பெண் சுய தொழில் முயற்சியாளர்களினை மீண்டும் மீண்டும் ஊக்கப்படுத்தக் கூடியதாக அமையும் என்பதனை அறியத்தருகின்றோம்.

அத்துடன் இக் கண்காட்சயில் நீங்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இக் கண்காட்சியினை சிறப்பிக்கும் முகமாக இரண்டாம் நாள் 4 ஜூன் 2016ம் திகதி இரவு 6.30 மணியளவில் 'ஆராதனா' இசைக் குழுவினரின் இசை நிகழ்வானது இடம்பெறும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

- மட்டக்களப்பு பெண் தொழில் முயற்சியாளர்கள் -

இந்துக் கல்லூரி மைதானம் , மட்டக்களப்பு
3,4,5 ஜூன்  மாலை  3.00 தொடக்கம் இரவு 10.00 மணி வரை