
சர்வதேச சூழல் தினத்தையொட்டி நாடு ழுழுவதும் சூழலை பாதுகாப்பதுடன் அதற்கான எதிர்காலத்தை எமது சமூகத்திற்கு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில்
மண்முனை; தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 03.06.2016 அன்று கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் மரநடுகை இடம்பெற்றதை தொடர்ந்து பிரதேசத்திலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மரநடுகை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ், உதவி பிரதேச செயலாளர் திரு.ஆ.நவேஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.செ பிரபாகரன், மங்களகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர் சி.ஜீவிதன், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேந்திரதாஸ் கிராம பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர் இவ்வாண்டு சூழல்தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட செயற்றிட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் பொது இடங்களில் மரநடுகை சிறப்பாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.