(படுவான் பாலகன்) வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை கிராமசேவையாளர் பிரிவின் கற்பகக்கேணி எனும் இடத்தில் யானை தாக்கி ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நேற்று(01) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
கற்பகக்கேணி வீதியால் தந்தையும், மகளும் சென்று கொண்டிருந்த போது வீதியோரத்தின் பற்றைக்குள் நின்றுகொண்டிருந்த யானை தந்தையின் பின்னால் வருகைதந்த மகளை தாக்கியுள்ளது. தாக்கப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மகளை யானை தாக்குவதை கண்டு தந்தை துரத்திய போது தந்தையையும் யானை தாக்கியுள்ளது. இதனால் ஐம்பந்தைந்து வயதான தந்தையும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இப்பிரதேசத்தில் யானையின் அட்டகாசங்கள் அதிகமாக உள்ளதுடன், அடிக்கடி உயிரிழப்புக்களும் இடம்பெற்றுவருதாகவும் இதனால் மிகுந்த அச்சத்தின் மத்தியிலே தங்களது வாழ்க்கையை கொண்டு செல்வதாகவும் இப்பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.













