முகப்புத்தக விருப்ப பக்கத்தில் (LIKE PAGE) மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களைப் (LIKE) பெற்ற இலங்கை அரசியல்வாதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் முதலிரு இடங்களை பிடித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முகப்புத்தக விருப்பப் பக்கத்தில் (இன்று பகல் 02.30 வரை) 1,002,300 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகப்புத்தக விருப்பப் பக்கத்தில் (இன்று பகல் 02.30 வரை) 1,001,040 விருப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரது முகப்புத்தக விருப்பப் பக்கத்தில் அதிகளவான மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து லைக் (LIKE) செய்துள்ளனர். எவ்வாறாயினும் இது வரையான முடிவுகளின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைவிட முகப்புத்தக விருப்பப் பக்கத்தில் அதிக விருப்பங்களைப்பெற்று (LIKE) முன்னிலையில் உள்ளார்.













