(சுபஜன்)
கல்வி நடவடிக்கைகளில் இனவாதம் இருக்கக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழிலே தேசித கீதம் பாடப்பட்டதற்கு ஒருவர் தாக்கப்பட்டார் அது மாத்திரம் அல்ல அன்மையிலே ஒரு மாணவன் முள்ளிவாய்க்கால் பற்றி முகப்புத்தகத்தில் பதிவேற்றியத்தற்காக பல சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டார் இதில் என்ன பிழை இருக்கிறது, தனது தகப்பன், மகன், சகோரதன், நண்பன் இறந்ததையிட்டு ஏன் அதை கொண்டாட முடியாது. ஒரு சில இன வாதிகளினால் தாக்கப்பட்டடு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டிருந்தார்.
ஆகவே இந்த இனவாதத்தை தூண்டுபவர்கள் களையப்பட் வேண்டும். இனவாத செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் இல்லாமல் செய்ய வேண்டும்.
இனவாதம் தூண்டப்படுவதனை இல்லாது ஒழிப்பதற்கு புதிய அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டியது அவசியமாகின்றது என அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.













