பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு

 (ஜெ.ஜெய்ஷிகன்)

வாழைச்சேனை பிரதேச செயலகம் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது.

பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஆரம்ப நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பொலிசார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுத்திகரிப்பு பணியிலீடுபடுவதைக் காண முடிந்தது. 
கரையோரம் பேணல் திணைக்களமும் இணைந்து அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.