புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் தீக்குழின் தீ ஏற்றல் நிகழ்வு.....

(எஸ்.சதீஸ்.)
மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலங்களில் ஒன்றாக திகழும், புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு நிகழ்வை ஒட்டி வௌ்ளிக்கிழமை(10) காலை  6.00 மணிக்கு தீக்குழியில் தீ ஏற்றும் சிறப்பு வைபவம் இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் திகதி ஆரம்பமான அம்பாளின் சடங்கு உற்சவம் (இன்று)  வௌ்ளிக்கிழமை மாலை இடம்பெறும் தீ மிதிப்பு மற்றும் இரவு​பூசைகளுடன் நிறைவு பெற்றவுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந் நிகழ்வில் தீக்குழியில் தீ ஏற்றும் விஷேட வைபவத்தினை படங்களில் காணலாம்.