(ஜெ.ஜெய்ஷிகன்)
வாகரை வம்மிவட்டவானைச் சேர்ந்த ஆசிரியர் திரு.தம்பிப்பிள்ளை சௌந்தரராஜன் இதயம் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள் உடனடியாக சத்திர சிகிச்சை (பைபாஸ்) செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். சிகிச்சைக்காக ரூபாய் 1.5 மில்லியன் ரூபாய் தேவை எனவும் கூறியுள்ளனர்.
இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளமையினால் இருதய சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து சிறுநீரக மாற்று சிகிச்சையும் செய்ய வேண்டியிருப்பதால் மேலும் பல இலட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான (வயது 2,9,12,14) இவரது குடும்பத்தினரால் பெருந்தொகைப் பணத்தினை திரட்ட முடியாதுள்ளது. இந் நிலையில் பரோபகாரிகளிடமிருந்து உதவியை நாடியுள்ளனர். இவருக்காக உதவி செய்ய முன்வருவோர் கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.075-388 8418
தொடர்புகளுக்கு திருமதி.சௌந்தரராஜன் யோகராணி , கணக்கு இலக்கம்:- 6489862 இலங்கை வங்கி.

















