வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் சுற்றாடல் தின சிறப்பு நிகழ்வுகள்

(ஜெ.ஜெய்ஷிகன்)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் சுற்றாடல் தின சிறப்பு நிகழ்வுகள் பல நடைபெற்றது. 
கல்லூரியின் முதல்வர் அ.ஜெயஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை சுறறாடல் படையணி மாணவர்கள் பொறுப்பாசிரியர் திருமதி.ச.துரைசிங்கம் சுற்றடல் உத்தியோகத்தர்திருமதி.த.யசோகாந்,கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், கோறளைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், யுனெப்ஸ் நிறுவன அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்களின் ‘சுழலைப் பாதுகாபபோம்’ என்ற தொனிப்பொருளில் நாடகம் இடம்பெற்றது சிறப்பம்சம்.
பொலித்தீன் பாவனையை குறைக்கும் வகையில் துணிப்பை பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. இத் துணிப் பையானது ஜனாதிபதி விருதிற்கான செயற்றிட்டமாக கல்லூரி மாணவன் கோகுல் என்பவரினால் மேற் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.