(ஜெ.ஜெய்ஷிகன்)
உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன்,,அமைப்பின் செயலாளர் புஸ்மா, றோசன் டயஸ் மற்றும் அகங்கத்தவர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உதவிப்பிரதேச செயலாளர் தனதுரையில் வாழச்சேனைப் பிரதேசத்தில் சிறுவர்,முதியோர், மாற்றுத் திறனாளிகள் அமைப்புக்கள் மாகாண மட்டத்தில் பேசப்படும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது. வாழ்வின் உதயம் அமைப்பும் சிறப்பாக இயங்கி வருவது பாராட்டுக்குரியது என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தனதுரையில் மாற்றுத் திறனாளிகள் எம்மைவிட திறன் படைத்தவர்கள். இங்கு சுயதொழிலில் முன்னேற்றமடைந்த பல வெற்றிக் கதைகளை கேட்டேன். முன்னுதாரணமாக உள்ள இவர்களைப் பார்த்து ஏனைய மாற்றுத் திறனாளிகளும் முன்னேற்றமடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அமைப்பின் அங்கத்தவர்களின் தேவைகளை கேட்டறிந்த ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்;துவதற்காக சுழற்சி முறையிலான கடன் திட்டத்திற்கான நதி ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.












